2019-ல் பா.ஜ.க தோல்வி அடைய பிரார்த்தனை செய்யுங்கள் : கிறிஸ்துவ பாதிரியாரின் மதவாதக் கடிதம்

டெல்லி திருச்சபைகளின் மாவட்ட உயர்மறை பேராயர், அணில் கோட்டா, மே 19 அன்று தனக்கு கீழுள்ள தேவாலயங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வருகின்ற 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளமன்ற தேர்தலில் பா.ஜ.க தோற்பதற்காக பிரார்த்தனை மற்றும் உபவாச கூட்டத்தை நடத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்திற்கு, ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல உயர்மறை பேராயர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக விற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தேவாலயங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது அதிகரித்து வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் களங்கம் விளைவிக்கும் மதவாத செயலாக கருதப்படுக்கறது. இப்படி, ஒரு மதம், அதிகாரபூர்வமாக ஒரு கட்சிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று கூறுவது, இந்திய மக்களிடையே மதவெறியை புகுத்தி, மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் நோக்கம் கொண்டது. ஆனால் சமூக நீதி, மதச்சார்பின்மை பேசும் எந்த அரசியல் கட்சியும் இந்த மத ரீதியான பிளவுபடுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reference & Pic Courtesy : http://www.