83 வயது மூதாட்டியை கைது செய்த கேரள காவல்துறை : தொடரும் இந்துக்கள் மீதான கேரள போலீஸின் அராஜகம்

 | 
நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.
பின்னர், நிலக்கல் மற்றும் பம்பையில் ஐயப்ப பக்தர்களை கடுமையாக தாக்க துவங்கினர் கேரள காவல்துறையினர். இதில் ஐயப்ப பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, கந்தர்ராரு மஹேஸ்வரரு தந்த்ரீகளின் மனைவியான 83 வயது தேவகி அந்தரஜனம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
https://twitter.com/firstpost/status/1052447741236920320?s=19
இதை தொடர்ந்து, கேரள காவல்துறையினரின் அடக்குமுறையை பலரும் கண்டித்து வருகின்றனர். 83 வயது மூதாட்டியை கைது செய்ததற்கு பெண்ணியவாதிகளும் மயான அமைதி காத்துவருகின்றனர்.
https://twitter.com/im_saiganesh/status/1052975541156864000?s=19
கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்து விரோத நடவடிக்கைகள் எல்லை மீறி செல்வதாக இந்துக்கள் உணர்கின்றனர்.