மாவீரன் அமித்ஷாவின் அடுத்த அவதாரம்! அலறும் எதிர்கட்சியினர்!!

 | 

அமித் ஷா - இந்த பெயர்தான் எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். அமித் ஷா தமிழ் நாட்டிற்கு வந்து 6 மாதங்கள் தங்கப்போகிறார் என்றால், மு.க.ஸ்டாலின் முதல் திருமாவளவன் வரை அனைத்து மோடி எதிர்பாளர்களுக்கும் பேதி ஆகி விடும். எதனால் இப்படி அலறுகிறார்கள்? யார் இந்த அமித் ஷா?


அமித் ஷா 22.10.1964 அன்று மும்பையில் பிறந்தார். தந்தை அனில் சந்திர ஷா. தாயார் குசும்பென். பள்ளிப்படிப்பை குஜராத்தில் உள்ள மான்சாவில் முடித்தார். கல்லூரி படிப்பை குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தொடந்தார். இவர், 1980-ஆம் ஆண்டு தனது 16-வது வயதில் தன்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைத்துக்கொண்டார். அதன்பிறகு அகில இந்திய மாணவர் அமைப்பான ABVP-யில் இணைந்து பணியாற்றினார்.


அமித் ஷா-வின் வாழ்க்கையில் 1982-ஆம் ஆண்டு ஒரு பெரும் திருப்பு முனையை ஏற்படுயது. ஆமாம், அந்த ஆண்டில்தான், நரேந்திர மோடியை சந்தித்தார். பார்த்த உடனேயே அமித் ஷா-வின் திறமையை துல்லியமாக கணித்தார் நரேந்திர மோடி. அதன்பிறகு 1982-ஆம் ஆண்டு முதல் அமித் ஷா, ABVP-யின் குஜராத் மாநில இணை பொது செயலாளராக பணியாற்றினார்.


1986-ஆம் ஆண்டு நரேந்திர மோடி, குஜராத் மாநில பா.ஜ.க செயலாளராகப் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து அமித் ஷா-வும், 1987-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் பா.ஜ.க இளைஞரணியில் தீவிரமாக செயல்பட்டார். அப்போது, வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பதிலும், தேர்தல் வியூகங்களை வகுத்துச் செயல்படுத்துவதிலும் அமித் ஷா-வின் ஆற்றலைக் கண்டு வியந்து போனார் நரேந்திர மோடி.


1995-ஆம் ஆண்டு, கேசுபாய் படேல் தலைமையில் முதல் முறையாக குஜராத்தில் பா.ஜ.க அரசு அமைந்தது. அப்போது குஜராத்தின் நகரங்களில் கட்சி வலுவாக இருந்தாலும், கிராமங்களில் பலவீனமாகவே இருந்தது. கிராமங்களை நோக்கிச் செல்வதே கட்சியை பலப்படுத்தும் என்பதால் நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணி, பா.ஜ.க-வை கிராமங்களுக்கு கொண்டு சென்றது. அதற்காக இருவரும் கடுமையாக உழைத்தனர்.


பஞ்சாயத்து மட்டத்தில் பா.ஜ.க-வை வலுப்படுத்தினர். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் பா.ஜ.க-வின் பக்கம் கொண்டு வந்தனர். பஞ்சாயத்து கமிட்டிகளை அமைத்தனர். இதன்மூலம் கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தியதால் கட்சியின் அமைப்பு பலமானது. இதுபோல, குஜராத்தில் உள்ள ஏராளமான பால் பண்ணை சங்கங்களை பா.ஜ.க வசம் கொண்டு வந்தனர். கூட்டுறவு சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளிலும் பா.ஜ.க-வின் பெரும்பான்மையில் இருந்தனர். 
நரேந்திர மோடியும், அமித் ஷா-வும் ஒவ்வொரு முடிவுகளையும் கீழ் மட்டத்தில் இருந்தே எடுத்தனர். களத்துக்குச் செல்லாமல் அவர்கள் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை. இப்போதும் அப்படித்தான்.


1991 –  2009 வரை பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியின் தேர்தல் பணிகளை அமித் ஷா கவனித்தார். அபோது தேர்தல் வியூகங்களை வகுபது முதல் பூத் நிர்வாகிகளை நியமிப்பது வரை அனைத்தையும் அமித் ஷா-வே நேரடியாக கவனித்தார். 1996-ஆம் ஆண்டு குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தேர்தல் பணிகளை செய்தவரும் அமித்ஷாதான்.


1997-ஆம் ஆண்டு, குஜராத்தின் சர்கேஜ் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2001-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சரானார் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து அமித்ஷாவை, குஜராத் மாநில அமைச்சராக்கினார் நரேந்திர மோடி. அமித்ஷா, ஒரே நேரத்தில் 18 துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். அதோடு ஒவ்வொரு துறைகளையும் சிறப்பாக முன்னேற்றி உள்ளார் என்பது அவரது திறமைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்தது.


2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அமித்ஷா. பிராமணர்களும், தாக்கூர்களும், யாதவ்களும், பட்டியலின மக்களும் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் அரசியலில் ஒரு குஜராத்தியான அமித்ஷாவால் என்ன செய்துவிட முடியும் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில், மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. அப்போது தான், அமித் ஷாவை அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க-வின் அகில இந்திய தலைவரானார். பின்னர் தொடர்ந்து இந்தியாவில் அதிக மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி மலர்ந்தது. 


அமித் ஷாவுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரமும் அத்துபடி என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் அவர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பூத்கள் வரையிலும் ஊடுருவுகிறார் என்பது தான் அவரின் தனிச்சிறப்பு. பூத் மட்டத்தில் கமிட்டி அமைத்து, அவைகளை ஒருங்கிணைத்து வெற்றிக்கான வியூகங்களை வகுத்து செயல்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். வேட்பாளர்களை தேர்வு செய்வது முதல் தேர்தல் பணிகளை செயல்படுத்துவது வரை அமித் ஷாவின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது.


மேற்கு வங்காளத்தில் சவால் விட்டார் மம்தா, அந்த மம்தாவின் கோட்டையையே சாய்த்து விட்டார் அமித் ஷா. இதற்காக அவர் எடுத்த முயற்சிகள், வகுத்த வியூகங்கள், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். தேர்தலுக்கு முன்பே, அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். பா.ஜ.க 18 இடங்களை பிடித்தது. 34 எம்.பி-க்களை வைத்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 22 எம்.பி-களாக சுருங்கியது.


திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு விடைகொடுத்தவரும் அமித் ஷாவே.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங்கை காங்கிரஸ் களம் இறக்கியது. இவர் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமுதாய வாக்காளர்கள் 1.25 லட்சம் பேர் உள்ளனர். 3.5 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவரை எதிர்த்து பெண் துறவி பிரக்யா சிங்கை களம் இறக்கினார் அமித் ஷா. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த மலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்கை தொடர்பு படுத்தி அவரை கைது செய்ததனர். அதோடு அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளுக்கும் அளவே இல்லை. இந்து தீவிரவாதம் என்ற ஒன்றை புதிதாக கட்டமைத்து உலாவ விட்டது மட்டுமல்லாமல், இந்து மதத்தை திட்டமிட்டே இழிவுபடுத்தியது காங்கிரஸ். அதற்காக பயன்படுத்தப்பட்ட, கொடுமைபடுத்தப்பட்டவர் இந்த சாத்வி பிரக்யா சிங். இவரை மிகத் தைரியமாக களம் இறக்கினார் அமித் ஷா. பிரக்யா சிங்கை, வேட்பாராக அறிவித்த உடனேயே திக் விஜய் சிங் அலற ஆரம்பித்தார். பின்னர் அவருக்காக அவரே ஓட்டு போடாமல், முடிவில் தோற்றே போய்விட்டார். இவை அனைத்தும் அமித் ஷாவின் சாணக்கியத்தனத்தால் நடந்தவை என்பதில் எள்ளவும் ஐயமில்லை.


ஒருபுறம் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்வதற்கான செயல் திட்டங்களை வகுத்தார் அமித் ஷா. அதேநேரம், எதிரணியை பலவீனப்படுத்தும் வேலைகளையும் நேர்த்தியாக செய்தார். பீகாரில் கடந்த தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்று 22 இடங்களில் வெற்றி பெற்றது. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருந்தன. இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும் 17 இடங்களுக்கு மேல் பெறும் என்பது கள நிலவரம். ஆனால் அமித் ஷா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்தார். இதில் பா.ஜ.க-வுக்கு வெறும் 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பா.ஜ.க-வுக்கு இடம் குறைவாக கிடைத்தாலும் எதிர் அணிக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் அனைத்தும் கூட்டணி கட்சிகளுக்கே கிடைத்தன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களை பா.ஜ.க கூட்டணி வென்றது.


இதுபோலவே, மகராஷ்டிராவின் நிலையும். சிவசேனா, தொடர்ந்து பா.ஜ.க-வை விமர்சித்து வந்தது. பா.ஜ.க-வும், சிவ சேனாவும் தனித்து தான் களம்காணும் என்று நினைத்தனர். ஆனால் அமித் ஷாவின் சாணக்கியதனத்தால், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. எதிரணி பலவீனப்பட்டது. இதனால் மொத்தமுள்ள 48 இடங்களில் பா.ஜ.க கூட்டணி 41 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கூட்டணியால் வெறும் 5 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதுபோன்று விட்டுக்கொடுத்து வெற்றி கண்டார் சாணக்கியர் அமித்ஷா.


இந்தமுறை மத்திய அமைச்சரவையில் அமித் ஷா இடம்பெற உள்ளார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, எதிர்கட்சியினர் அலறுகின்றனர். அதுவும் உள்துறை போன்ற துறைகளுக்கு அவர் அமைச்சராகிவிட்டால்?