சூடுபிடிக்கிறது ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் அமித்ஷா!

 | 

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30, டிச., 6,12,16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் டிச.,23 அன்று அறிவிக்கப்பட உள்ளது. இங்கு, தற்போது பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.நரேந்திர மோடி ஜார்க்கண்டில் 5 முதல் 8 பொதுக்கூட்டங்களில் வரை தேர்தல் பிரச்சாரம் செய்வார் என கட்சி வட்டாரங்கள் கூறப்படுகிறது.


நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அயோத்தி ,காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்,அயோத்தி வழக்கை தொடர்ந்து விசாரிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. தற்போது, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


ஓட்டு வங்கி அரசியலுக்காக காஷ்மீரில் பிரச்னை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது பிரதமர் மோடி, சிறப்பு சட்டத்தை நீக்கி, காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளார், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரகுபர்தாஸ் ஆட்சிகாலத்தில் மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.