எதிரியே ஆனாலும் மாநில வளர்ச்சிக்காக எங்களுக்கு மோடி அரசுதான் வேண்டும் ! ஆதரவு கரம் நீட்டும் பிஜூ ஜனதா தளம் !!

 | 


ஒரிசாவில் மாநில சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஓரே சமயத்தில் சில நாட்களுக்கு முன்பு முடிந்தன. இந்த மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் வலுவிழந்துவிட்டது. பாஜக கால் பதிக்க தொடங்கிவிட்டது. அங்கு வலுவான கட்சியாக இருக்கும் பிஜுஜனதா தளத்துக்கும் , பாஜகவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி என பேசப்பட்டது.  


நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பல ஊடக நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளிலும் ஒரிசாவில் பாஜகவுக்கு 10-13  நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்,  பிஜுஜனதா தளத்துக்கு 7-11  நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் பிஜுஜனதா தளம் அதிக இடங்களை பெற்று முதல்வராக பிஜுபட்நாயக் தொடர உறுதியான வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் பிஜுஜனதா தள மூத்த தலைவரும்,  முதல்வர் பிஜுபட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவருமான அமர்பட்நாயக் கூறுகையில் " நடந்து முடிந்த தேர்தலில் ஒரிசாவில் பாஜகவுடன் நாங்கள் மோதினாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உதவி செய்வோம். தேச நலனும் எங்களுக்கு முக்கியம். அதே சமயம் மாநில நலன்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். 
எனவே மத்தியில் அமையும் பாஜக அரசின் சேர்ந்தோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்போம் என அறிவித்துள்ளார். 


இது பாஜகவுக்கு மேலும் ஒரு சாதகமாக பார்க்கப்படுகிறது.   பாஜகவுக்கு ஆதரவாக ஒரு மாநிலமே களம் இறங்கி வந்திருப்பது கொள்கை இல்லாமல் கூடு சேர்ந்து வரும் எதிர்கட்சிகளுக்கு சவுக்கடி அடித்ததுபோல உள்ளது.    
https://rightlog.in/2019/05/bjd-bjp-nda-01/