தமிழகத்தில் பாஜகவின் கொடி பறக்கும் 5-ல் 4-தொகுதிகளை வெல்ல காத்திருக்கும் பாஜக !

 | 

நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக 299 இடங்களில் தனித்தும் மற்றும் கூட்டணி கட்சிகள் 48 இடங்களிலும் மொத்தமாக 347 இடங்களை பெற்று சாதனை படைக்கும் என்று கருது கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில் அனைவரது எதிர்பார்ப்பும் உ.பி தான் .ஏனென்றால் இந்த மாநிலம் தான் 80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது. இந்த மாநிலத்தில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்குதோ அந்த கட்சியே மத்தியில் ஆட்சி அமையும் என்பது வரலாறு . இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.


மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக ,பாஜக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும் எனவும் அதில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெரும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றனர்