முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்கிறது,வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்!

 | 

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சிகளுக்கு 91, 975 பதவிகள் இடங்களை நிரப்புவதற்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது,இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது,27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது, 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் 260 மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் , 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 4700 ஊராட்சித் தலைவர்கள்,  37 ஆயிரத்து 830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.முதல் கட்ட தேர்தல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க, தி.மு.க ,பா.ஜ.க, பாமக என பல அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்  பலரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், வாக்குச்சாவடியில் ஓட்டு பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது,தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கி வருகின்றனர்,ஊரக உள்ளாட்சி தேர்தலில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.