ரத்து செய்யப்படுகிறதா..?..கமலஹாசனின் கட்சி பதிவு..?

 | 

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே . மகாத்மா காந்தியை கொலை செய்த இந்து பயங்கரவாதி" என்று பேசினார் .அதிகளவில் திரண்டிருந்த முஸ்லீம் மக்கள் முன்னிலையில் ஓட்டுக்காக இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். இது 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 123(3) கீழ் ஊழல் நடைமுறை என்பது தெளிவாக தெரிகிறது .

தேர்தல் நடத்தை விதிகளின் படி ,கட்சி மற்றும் வேட்பாளர்கள் மொழி ரீதியாகவோ ,மதம் அல்லது சாதி ரீதியாகவோ பரஸ்பரம் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வணக்கம் செலுத்துவதற்கு உரிய மற்ற இடங்கள் ஆகியவற்றை தேர்தல் பிரச்சாரத்துக்கான மன்றமாக பயன்படுத்த கூடாது. இந்த விதிகளை கமலஹாசன் மீறிவிட்டார்.


கமலஹாசன் வேண்டுமென்றே மதத்தின் அடிப்படையில் , வெவ்வேறு பிரிவினருக்கிடையே பகைமையை ஊக்குவிக்கிறார்.ஒற்றுமையையும்,சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல்களை செய்கிறார். இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ-ன் கீழ் குற்றமாகும். மேலும் கோடிக்கணக்கான இந்துக்களின் சமய உணர்வுகளை சீர்குலைக்கும் இந்த செயல் , பிரிவு 295 ஏ-ன் கீழ் மேலும் ஒரு குற்றம் ஆகும்.

எனவே, மேற்கூறிய உண்மையான குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு,இந்திய அரசியல் அமைப்பின் 324-வது அட்டவணைப்படி சுதந்திரமான மற்றும் நியாமான தேர்தலை உறுதிசெய்வதற்கு, கமலஹாசன் குறைந்தபட்சம் 5 நாட்களாவது தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.அதுமட்டுமில்லாமல் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .