அநியாயமாக டப்பிங் யூனியனலிருந்து நீக்கப்பட்ட பாடகி சின்மயி : 96 தான் என் கடைசி தமிழ் படம் என உருக்கம்

 | 
பாடகி சின்மயியை முன் அறிவிப்பு ஏதுமின்றி டப்பிங் யூனியனலிருந்து நீக்கியுள்ளதாக, அவர் பதிவிட்டுள்ளார். இது குறித்து பாடகி சின்மயி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டப்பிங் யூனியனிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இனிமேல் தமிழ் படங்களில் என்னால் டப் செய்ய முடியாது. இதற்கான  காரணமாக, நான் 2 ஆண்டுகளுக்கு 'சந்தா கட்டணம்' செலுத்தவில்லை என்று கூறியுள்ளனர். எனினும் எனது டப்பிங் வருவாயில் இருந்து 10% பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இல்லை. தமிழ் திரைப்பட தொழில்துறையின் விதிகள் படி, டப்பிங் தொழிற்சங்கத்தின் உறுப்பினராக இல்லாவிட்டால், வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். எந்தவொரு எழுத்துத் தகவலும் இல்லாமல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு படத்துக்கு என்னால் டப்பிங் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
முதலில் டப்பிங் தொழிற் சங்கத்திலிருந்து வெளியேற்றப்படுவேன் என்று நான் எதிர்பார்த்தேன். எனக்கு மீண்டும் எனது உறுப்பினர் அட்டை திரும்ப வருமா என்று தெரியாது. எனக்கு தெரியப்படுத்தாமலேயே எனது  உறுப்பினர் பதவியை நீக்கியுள்ளனர். நான் இன்னும் அமெரிக்காவில் பிரபலமான கச்சேரி சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். தமிழ் மொழியில் கடைசி படமாக 96 தான் இருக்கும் என தோன்றுகிறது", என்று பதிவிட்டுள்ளார்.
பாடகி சின்மயியை அநியாயமாக டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கியிருப்பதை பல ரசிகர்களும் கண்டித்து வருகின்றனர். வைரமுத்துவின் காம வெறியாட்டங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால் பழி வாங்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
https://twitter.com/Chinmayi/status/1063776204606464002?s=19