பிரகாஷ்ராஜ் நீலிகண்ணீர் வடிக்கும் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் சகோதரர் பா.ஜ.க-வுக்கு பிரச்சாரம் - கர்நாடக தேர்தலில் அடடே திருப்பம்!

 | 
கெளரி லங்கேஷின் சகோதரரான, இந்திரஜித் லங்கேஷ், கர்நாடக சட்டசபை தேர்தலில் மல்லேஷ்வரம் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான டாக்டர் அஸ்வத் நாராயனுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஏழு மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரில், தனது வீட்டிற்கு வெளியே கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டில் வலதுசாரி அரசியலை விமர்சிப்பவராக பரவலாக கருதப்பட்ட கெளரி லங்கேஷின் கொலைக்கு காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க-மீது குற்றம் சாட்டி வந்தனர்.
முன்னதாக,  இடதுசாரி அமைப்புகளின் சில தவறான நடவடிக்கைகளை தனது சகோதரி போட்டுடைப்பதாக இருந்ததால் இடதுசாரி அமைப்புகளிடமிருந்து, கெளரி லங்கேஷிர்க்கு கொலை மிரட்டல் வந்ததாக இந்திரஜித் கூறியிருந்தார்.
கெளரி லங்கேஷின் மரணத்திற்கு, முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை இந்திரஜித் குற்றம் சாட்டினார். கெளரி லங்கேஷின் மரணம் , ​​மாநிலத்தில் சட்டம் ஒழுங்குமுறையின் தோல்வி என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடியை பாராட்டிய இந்திரஜித் லங்கேஷ், பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை முழமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், தனது சொந்த கருத்தியலைப் பின்பற்றுவதாகவும், வேறு எந்தக் கட்சியையும் பின்பற்றவில்லை என்றும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மல்லேஷ்வரம் தொகுதி வேட்பாளர் டாக்டர்நா.அஸ்வந்த் நாராயண் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கெளரி லங்கேஷின் சொந்த சகோதரரே பா.ஜ.க-வுக்கு ஆதரவாக காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் பட்சத்தில் பிரகாஷ் ராஜ் போன்ற திடீர் போலி போராளிகள் கெளரி லங்கேஷை சொந்தம் கொண்டாடுவதும், அவரை பா.ஜ.க-வினர் தான் கொலை செய்தனர் என்று மீண்டும் மீண்டும் அப்பட்ட பொய் பரப்புரை செய்வதையும் பெங்களூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
Reference & Pic Courtesy - Swarajya