நடிப்பு சுதேசிகள் - தி.மு.க காங்கிரஸின் முகத்திரையை கிழித்தெறியும் மரு.இராமதாசு

"நடிப்பு சுதேசிகள் 1 : ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு 600 சரக்குந்து ஓடுகின்றனவாம். கோடிகள் கொட்டுகின்றனவாம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு தி.மு.க அனுமதி அளிக்குமாம். ஆனாலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவார்களாம். என்னவொரு நடிப்பு!
https://twitter.com/drramadoss/status/999202286088810496?s=19
நடிப்பு சுதேசிகள் 2 : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிதீவிரமாக போராடுவதைப் போன்று வெளியுலகில் குரல் கொடுத்து வருகிறார் ஓர் அரசியல் தலைவர் . ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் அவரது மருமகன் ஒப்பந்தம் எடுத்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக சொல்கிறார்கள். இது என்ன வகையான நடிப்பு?" என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/drramadoss/status/999201771368079360?s=19
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மருமகன், ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்தம் எடுத்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக சொல்கிறார்கள் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக ஊடகங்களோ, உண்மையை மறைத்து, மோடி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டு வருவது, ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.