சத்தமில்லாமல் மாபெரும் சாதனை ! கங்கை ஆற்றின் கரையில் உள்நாட்டு துறைமுகத்தை வாரணாசி அருகில் திறந்து வைத்தார் மோடி !

 | 
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி அருகில் கங்கை ஆற்றின் கரையில் உள்நாட்டு துறைமுகத்தை திறந்து வைத்தார். பொதுவாக கடல்வழி போக்குவரத்தில் டன் கணக்கில் சரக்கு கொண்டு செல்லப்படும். முதல் முறையாக ஆறு வழியாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது. இந்தியாவின் அனைத்து ஆறுகளையும் சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக வாரணாசியில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து துறைமுகம் மற்றும் முனையங்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் பல ஆறுகளில் துறைமுகம் மற்றும் முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தை மோடி அவர்கள் நேற்று துவக்கிவைத்தார். மேற்கு வங்கம் காலடியாவிலிருந்து வாரணாசி வரை சரக்கு கொண்டு செல்ல வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது, இந்த வழி தடத்தில் முதல் முறையாக பெப்சி நிறுவனத்தின் சரக்கு வாரணாசி வந்தடைந்தது. இதை பா.ஜ.க வின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் வரவேற்றனர். மிக சிறந்த திட்டம், நாட்டின் பல ஆறுகளில் செயலுக்கு வரும். ஆனால் தமிழ் நாட்டில் நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகமே! இங்கு ஆறுகளில் தண்ணீரை பார்ப்பதே அதிசியம் !