தாமரை வடிவிலான இனிப்புகள் தயார் ! கலைக்கட்டும் ஜனநாயக திருவிழா !

 | 

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் எக்சிட் போலில் பாஜக கூட்டணியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக நேற்று மதியம் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக கிரீம் வைத்த கேக், லட்டுக்கள், பெங்காலி ஸ்வீட்டுகள், தாமரை வடிவிலான பர்ஃபிக்கள் 50 கிலோ ஆகியவற்றை பாஜக ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது.


நன்றி : Oneindia Tamil