சாத்வியா பிரக்யாவை உயிரோடு எரித்துக் கொல்லப் போவதாக காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்! மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

 | 


மக்களவையில் சென்ற புதன் கிழமை அன்று சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்பி ஏ.ராஜா விஷமத்தனமாக காந்தியை கொன்றவர் கோட்சே என்று தேவை இல்லாமல் கூறினார். அப்போது மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்.பி சாத்வியா பிரக்யா குறுக்கிட்டு பேசுகையில் கோட்சேவை தேச பக்தர் என்று கூறினார்.


அவரின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அப்போது சாத்வியா பிரக்யா தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கையில் தீவிரவாதி என கூறப்பட்ட உத்தம் சிங்கை இங்கு தேசபக்தர் என பாராட்டவில்லையா? அந்த வகையில்தான் தானும் குறிப்பிட்டதாக கூறினார்.


இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், இராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங்கும் நேற்று கோட்சேவை ஒரு ‘தேசபக்தர்’ என்று வர்ணிக்கும் எந்தவொரு தத்துவத்தையும் பாஜக கண்டனம் செய்ததாக கூறினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூரை ஒரு ‘பயங்கரவாதி’ என்று வருணித்திருந்தார்.


இந்த நிலையில்  மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பியாரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவர்தம் டாங்கி சாத்வி பிரக்யா சிங் மத்திய பிரதேசத்தில் எப்போதாவது கால் வைத்தால் அவர் உயிருடன்  எரிக்கப்படுவார் என்று அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


இதை அடுத்து கொலை மிரட்டல் விடுத்த எம் எல் ஏ வுக்கு எதிராக மத்திய பிரதேச இந்து அமைப்புகள் போர் கோடி தூக்கியுள்ளன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Translated Article From OPINDIA