கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயலை தி.மு.க செய்கிறது - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தி!

 | 

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது,இந்நிலையில்தேர்தல் ஆணையம் அறிவித்தபடி  நாளை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர்  மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது, இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் சட்ட மன்ற தலைவர் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயலை தி.மு.க செய்கிறது - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தி!தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் ஒரு உள்ளாட்சித் தலைவர் பதவி கூட காங்கிரசுக்கு வழங்கப்படவில்லை மற்றும் துணைத் தலைவர் பதவியை இதுவரை ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது மேலும் 303 ஒன்றிய தலைவர் பதவியில் வெறும் 2 மட்டுமே காங்கிரஸ்க்கு திமுக ஒதுக்கி உள்ளதாகவும் இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயல் என்றும் இது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.