மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் அது நீண்டகாலம் நிலைக்காது - நிதின் கட்கரி!

 | 

மஹாராஷ்டிராவில்,  நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ.,வுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவின் ,ஆட்சியில் சமபங்கு கோரியதால் கூட்டணி முறிந்தது. இதனால், எந்த கட்சியும் பெரும்பாண்மை இல்லாததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால், காங், தேசியவாத காங், கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா ஆயத்தமாகி வருகிறது.இன்னும் பேச்சுவார்த்தை முடிந்தபாடுல்லை ஆட்சியமைத்த பாடுல்லை.மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்து நிதின் கட்கரி இன்று பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர் சிவசேனா ,காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  வெவ்வேறு கொள்கைகள் கொண்டது ,வெவ்வேறு கருத்துக்களை கொண்டது அவர்களால் நிலையான ஆட்சி தர முடியாது ஆனால் பாஜகவும் சிவசேனாவும் ஒரே கொள்கை கொண்டது,பாஜ., மற்றும் சிவசேனா கூட்டணி ஹிந்துத்துவத்தின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றும் கூட எங்களுக்கு அதிக கருத்து வேறுபாடுகள் இல்லை.


அதை மீறுவது நாட்டிற்கு மட்டுமல்ல, ஹிந்துத்துவத்திற்கும், மஹாராஷ்டிராவிற்கும் ஒரு இழப்பாகும்.மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் அது நீண்டகாலம் நிலைக்காது என்றார் நிதின் கட்கரி.