உன்னை இலண்டன் கோர்ட்டில் நிறுத்துவேன்!! ராகுல் காந்திக்கு லலித் மோடி பகிரங்க மிரட்டல்!

 | 


 காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தில், திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற வார்த்தை இருக்கிறது என்று பேசினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில் நிதிமுறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது ட்விட்டர் பதிவில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுலை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போவதாகவும் 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது காந்தி குடும்பம் தான் என்பது உலகத்திற்கே தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.