தேசவிரோதமாக நுழைந்தவர்களை விரட்டுவோம் -பாஜக தலைவர் அமித்ஷா

 | 

பாஜக மீண்டும்
ஆட்சிக்கு
வந்தால்
வங்கதேசத்தில்
இருந்து
இந்தியாவுக்குள்  தேசவிரோதமாக நுழைந்தவர்களை
விரட்டுவோம்
என்று
பாஜக
தலைவர்
அமித்ஷா
தெரிவித்துள்ளார்.


மேற்குவங்க மாநிலம்
ராய்கஞ்ச்
என்ற
இடத்தில்
நேற்று
நடந்த
தேர்தல்
பிரச்சாரக்
கூட்டத்தில்
பாஜக
தலைவர்
அமித்ஷா
பேசியதாவது:


போலி மதச்சார்பற்ற
கட்சிகள்
சிறுபான்மை
மக்களை
வெறும்
ஓட்டு
வங்கிகளாக
மட்டுமே
பார்க்கின்றன.
சிறுபான்மை
மக்களின்
முன்னேற்றத்துக்கு
அக்கட்சிகள்
எதுவும்
செய்யவில்லை.
மேற்குவங்கத்தில்
முதல்வர்
மம்தா
பானர்ஜி
தலைமையிலான
திரிணமூல்
காங்கிரஸ்
அரசு
ஓட்டுக்காக
சிறுபான்மையினரை
திருப்தி
செய்வதிலேயே
ஆர்வமாக
உள்ளது.


வங்கதேசத்தில் இருந்து
மேற்குவங்கத்தில்
ஏராளமானோர்
சட்ட
விரோதமாக
ஊடுருவியுள்ளனர்.
இந்த
ஊடுருவல்காரர்கள்
கரையான்களைப்
போன்றவர்கள்.
ஏழைகளுக்குக்
கிடைக்க
வேண்டிய
உணவை
இவர்கள்
சாப்பிடுகின்றனர்.
நமது
வேலைவாய்ப்புக்களை
ஊடுருவல்காரர்கள்
பறிக்கின்றனர்.
வெளிநாட்டில்
இருந்து
சட்ட
விரோதமாக
குடியேறியவர்களை
வெளியேற்றவும்
இந்தியக்
குடிமக்களுக்கு
நியாயமான
உரிமைகள்
கிடைக்கவும்தான்
தேசிய
குடிமக்கள்
பேரேடு
திட்டத்தை
பாஜக
அரசு
கொண்டுவந்தது.
மத்தியில்
பாஜக
மீண்டும்
ஆட்சிக்கு
வந்தால்
ஊடுருவல்காரர்கள்
என்ற
கரையான்களை
கண்டுபிடித்து
விரட்டுவோம்.
அவர்களை
நாட்டை
விட்டு
தூக்கி
எறிவோம்.
அதேநேரம்,
இந்து
மற்றும்
புத்தமத
அகதிகளுக்கு
குடியுரிமை
வழங்கப்படும்.