“இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாத்தது தி.மு.கதான்” என்று பதிவிட்டு நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார் உதயநிதி!

 | 

இந்துக்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் மிகக் கேவலமாக விமர்சித்து பேசி அரசியல் செய்து வருகிறது திமுக. சமீபகாலமாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இந்து விரோத போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ்-க்கும் வாழ்த்து தெரிவிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இந்துக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.


தற்போது வெளியாகியுள்ள உள்ளாட்சி தேர்தல், திமுகவுக்கு பிரமாண்டமான வெற்றி என்று சொல்வதற்கு இல்லை. பாராளுமன்ற தேர்தல் முடிவை ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது, திமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. ஓட்டு சதவீதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்துக்களுடைய புறக்கணிப்பு தான்.


இதனை உணர்ந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “திமுக இந்து விரோத கட்சி அல்ல” என்கின்ற வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-


இட ஒதுக்கீட்டின் மூலம் இந்துக்களுக்கான உரிமையை உறுதிசெய்வதும், அறநிலையத்துறை மூலம் ஆலயங்களுக்குக் குடமுழுக்கு நடத்தி அவற்றின் சொத்துக்களைப் பாதுகாத்ததும் தி.மு கழகமே. இன்றைய சூழலில் “இந்துக்களின் உண்மையான எதிரிகள் யார்?” என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
https://twitter.com/Udhaystalin/status/1212704283906326528


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்துக்களின் கோவில் சொத்துக்களை திமுக பாதுகாத்து வந்துள்ளது என்று மிகப் பெரிய பொய்யை அப்பட்டமாக பொதுவெளியில் வெளியிட்டுள்ளார்‌ மூன்றாம் கலைஞர் உதயநிதி. ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது.


2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், உதயநிதியின் முகத்திரை கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் அறிக்கையில், வரிசை எண் 295-இல், “வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்து உள்ளனர்.


ஆனால் அதேநேரம் வரிசை எண் 419-இல், “இந்து கோவில் மனைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்" என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


அதாவது முஸ்லிம்களிடையே வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும். ஆனால் அதேநேரம் இந்துக்களின் கோவில் சொத்துகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கே கிரையம் செய்து கொடுக்கப்படும் என்பதுதான் திமுகவின் நிலைபாடு என்பது தெளிவு.


இதுதான் திமுகவின் உண்மை முகம். ரம்ஜான் தினத்திற்கு வாழ்த்துகூறி, தலையில் குல்லா அணிந்து நோன்பு கஞ்சி குடிக்கும் மு.க.ஸ்டாலின், “இந்து திருமண மந்திரங்களில் மிக கேவலமானது” என்று கூறினார்.


அன்று இந்துக்களை “திருடன்” என்று சொன்னார் கருணாநிதி. இன்று மூன்றாம் கலைஞர், “இந்துக்களின் பாதுகாவலன் திமுக” என்பதுபோல் பித்தலாட்டத்தை தொடங்கியுள்ளார்.


இவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இந்த பதிவை உதயநிதி டுவிட்டரில் வெளியிட்ட சில நிமிட நேரங்களிலேயே அவரை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.


பிரதிப் தனது பதிவில்,


ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாத்தது தி.மு.கழகமே! – உதயநிதி


திமுக தேர்தல் அறிக்கை - 2016:


வரிசை எண் - 295:


வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். 


வரிசை எண் - 419: இந்து கோயில் மனைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்.
https://twitter.com/AskPradeepG/status/1212977246144589824


என்று குறிப்பிட்டுள்ளார்.


“இப்ப சொல்வது : திமுக இந்து விரோத கட்சி இல்லை


செய்தது : வெங்கடாஜலபதி பக்தர்கள் நம்பிக்கையை மதிக்காமல் கொச்சையாக பேசியது.


இந்துக்கள் நம்பிக்கையை மட்டும் கிண்டல்” என்று கனிமொழியின் இந்து விரோத பேச்சின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/cosmicblinker/status/1212730975399972865


“என்ன தம்பி திடீர்னு இந்துக்கள் காலை நக்க ஆரம்பிச்சுட்டிங்க. உங்க சிறுபான்மை டோலர்களுக்கு கோச்சுக்கு போறானுங்க” என்று பதிவிட்டுள்ளார், திலீப் கன்னா.
https://twitter.com/DilipKannan/status/1212733734878773249


“என்ன கதறல் அதிகமாக இருக்கு! உள்ளாட்சியில் MP தேர்தல் போல் 38 தொகுதிக்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அள்ளலாம்னு நினச்சா, அதில மண்ணை போட்டாங்க....பாதி தேறுவதே சிரமம்! அதுதானா?” என்று பதிவிட்டுள்ளார் கமுதிகாரன்.
https://twitter.com/selva_rs2/status/1212746210374610944


“அப்படீன்னா, இதை யார் போட்டிருந்தாலும் ; அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து; அந்த வழக்கு எண்ணை டுவிட்டரில் பதிவிடு” என்று உதயநிதியின் இந்து விரோத கருத்து வெளியான பத்திரிகை இணைத்துள்ளார்.
https://twitter.com/Rajuman74740398/status/1212745345328807936


உதயநிதிக்கு நெட்டிசன்களின் அர்ச்சனை தொடர்கிறது.