மம்தா வீட்டுக்கு இலட்சக்கணக்கில் அனுப்பப்படும் ‘ஜெய் ஸ்ரீராம்’ போஸ்ட் கார்டுகள்: முதல்வர் இல்ல அலுவலர்கள் திகைப்பு!!

 | 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தேர்தல் பிரசார பேரணி மேற்கொண்ட போது, பாஜகவுக்கு எதிராக  திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கொல்கத்தா நகரமே பதற்றத்துடன் காணப்பட்டது. அப்போது பாஜக தொண்டர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் வன்முறைகளை எதிர் கொண்டனர்.


‘ஜெய் ஸ்ரீராம்’ வாசகத்தை கோஷமிட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வார்த்தையை மம்தா கிண்டல் செய்தார். இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  


இந்நிலையில் தங்கள் வாசகத்தை கிண்டல் செய்த மம்தாவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமான தபால் அட்டைகளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்தை எழுதி மம்தா பானர்ஜியின் வீட்டு முகவரிக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.


இதை ஒரு இயக்கமாகவே பலரும் நடத்தி வருகின்றனர். இன்று நேற்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மம்தா பானர்ஜியின் தூக்கத்தை தட்டி எழுப்புவதற்காக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் தபால் அட்டைகள் மூட்டை மூட்டையாக அவரது முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகளை பார்த்து முதல்வர் இல்ல அலுவலர்கள் மிர