அயோத்தி தீர்ப்புக்கு JNU மாணவர்கள் எதிர்ப்பு! ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுடன் மற்றொரு கோஷ்டி ஆதரவு! பதற்றத்தால் டெல்லியில் போலீஸ் குவிப்பு!

 | 

பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த ராமஜன்ம பூமி - பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 9) வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது, சர்ச்சைக்குரிய இடத்தில் ஸ்ரீ ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த தீர்ப்புக்கு அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும், மத வேறுபாடில்லாமல் அனைத்து தரப்பினரும் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர்.


இந்த நிலையில், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்களில் ஒரு குழுவினர் சுமார் 50 பேர் இன்று காலை பல்கலை கழக வளாகத்தில் உள்ள  சபர்மதி தாபாவில் ஓன்று சேர்ந்தனர். அவர்கள் தீர்ப்பை எதிர்த்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து ஓன்று சேர்ந்தனர்.


அப்போது அந்த குழுவினர் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு எதிராகவும், அதிகாரிகள் மற்றும் சில ஆளும் தரப்பு கட்சி தலைவர்களையும் குறை கூறி கோஷம் போட்டனர். இந்த தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு ஆதரவாகவும் வழங்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்ப்பு எனவும் கூறி ஆர்பாட்டம் செய்தனர்.


போராட்டத்தின் அமைப்பாளர் ஷர்ஜீல் இமாம், உயர் நீதிமன்றம் முஸ்லிம்களைத் தவறவிட்டுவிட்டது என்றார்.. "தீர்ப்பைப் பற்றி விவாதிக்க நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். தீர்ப்பின் நகலை நாங்கள் வைத்திருந்தோம், அதன் சில முக்கியமான பகுதிகள் பற்றியும், நீதித்துறை மீண்டும் எங்களை எவ்வாறு தோற்கடித்தது என்பதையும் விவாதித்தோம்" என்று அவர் கூறினார்.
https://twitter.com/SwamiGeetika/status/1193402889038745601?s=20


அப்போது பா.ஜ.க தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகளை சாடி அவர்கள் கூச்சல் எழுப்பியதும் அங்கு மற்றொரு கோஷ்டியினர் ஓன்று சேர்ந்தனர். அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை திரும்ப திரும்ப மிகப்பெரிய அளவில் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் தலையீட்டால் இரு தரப்பும் கலைந்து சென்றனர்.