உயிர் தியாகம் செய்த தொண்டர்களின் குடும்பங்களே பதவியேற்பு விழாவின் சிறப்பு விருந்தினர்கள்! மனதை நெகிழ்ச்சியடைய செய்யும் மோடி - அமித் ஷாவின் ஏற்பாடு!!

 | 


தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் மாற்று கட்சியினர் பாஜகவைப்பற்றி பேசுகின்றனர். ஆமாம் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50 பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் தங்குவதற்கான வசதிகளை பாஜகவே செய்கிறது.


நரேந்திர மோடி 2 வது முறை பிரதமராக பதவி ஏற்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசியல் வன்முறைகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர். இதற்கான முடிவை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் எடுத்தனர்.


மேற்கு வங்கத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களின்போது பாஜகவினர் மீது திரிணாமுல் காங்கிரசால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 50 - க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட பாஜக தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களின் குடும்பத்தினர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் தொண்டர்களுக்கு எப்போதும் பாஜக துணை நிற்கும் என்பது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.