"எனது தந்தை வாஜ்பாயை பார்த்து பாஜகவில் இணைந்தது போல, நான் மோடியை பார்த்து இன்று இணைந்துள்ளேன்”: பாலிவுட் நடிகர் சன்னி தியோல்!

 | 


மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.


”எனது தந்தை வாஜ்பாயை பார்த்து பாஜகவில் இணைந்தது போல, நான் மோடியை பார்த்து இன்று இணைந்துள்ளேன்” என்று தியோல் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி வேண்டும் என்றும் அவர் கூறினார்.


சன்னி தியோல் கடைசியாக மொஹல்லா அஸ்ஸி என்ற படத்தில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான கர சேவா தொண்டராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியில் இவரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.