விஜய் மல்லையாவை நாடு கடத்தும் மோடி சர்க்கார் : மல்லையாவுக்கு மோடி உதவுகிறார் என்று கூக்குரல் இட்ட போலி போராளிகளின் மூக்குடைப்பு - ட்ரெண்டாகும் #ModiGetsMallaya

 | 
விஜய் மல்லையாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ₹9,000 கோடி வரை பெற்று, அதை அடைக்காமல் வங்கிகளை ஏமாற்றி வந்தவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. கடந்த 2014ஆம் ஆண்டு மோடி சர்க்கார் பதவி ஏற்றவுடன் வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. வசூல் செய்வதில் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தனி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் சிறை தண்டனைக்கு பயந்துபோன மல்லையா இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த மோடி சர்க்கார் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி கோரி இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
ஆனால் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக் கொண்டார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற் கொண்டு வந்தது. ஆனால் பிரிட்டனில் உள்ள சட்ட விதிமுறைகளால், அவரைக் கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுவந்தது. மோடி சர்க்காரின் கெடுபிடி நடவடிக்கைகளை அடுத்து 100 சதவீதம் அசல் கடன் தொகையை கட்டிவிடுவதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் அவர் சென்ற வாரம் வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி அவரை இந்திய அரசின் வேண்டுகோளின்படி இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இன்று இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்றாலும் பிரிட்டன் சட்டவிதிப்படி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மல்லையா மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றால், அவரை நாடு கடத்துவதற்கு உண்டான கோப்புகள் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு அவர் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலண்டன் சென்றுள்ள சி.பி.ஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லையாவை கொண்டுவரும் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.


இதனை அடுத்து, #ModiGetsMallaya என்ற ஹேஷ்டேகில் மோடி சர்க்காரை இணையவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல குற்றங்களை புரிந்து விட்டு, மோடி ஆட்சியில் தப்பி சென்ற மல்லையாவிற்கு மோடி உதவி வருவதாக போலி போராளிகளின் கூக்குரலுக்கு பெரிய மூக்குடைப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.