நரேந்திர மோடி பதவி ஏற்பு விழா! ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை! 23 எம்பிக்கள் இருந்தும் பயன் இல்லையே என்று உடன் பிறப்புகள் புலம்பல்!!

 | 


நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடக்கிறது. இதனால் தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆனந்த் சர்மா, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட பல தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பல்துறை சார்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். பதவியேற்பு விழாவில் பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். ராகுல் டிராவிட், சாய்னா நேவால், அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், பிடி உஷா, பூலேலா கோபிச்சந்த், தீபா கார்மார்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கவுதம் அதானி உள்ளிட்ட மிக முக்கிய தொழிலதிபர்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
சினிமா நடிகர், நடிகர்களை பொறுத்தவரை ஷாரூகான், சஞ்சய் லீலா பன்சாலி, ரஜினிகாந்த், கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரை பிரபலங்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்த முக்கிய விழாவிற்கு அழைக்கவில்லை. இதனால் ஸ்டாலின் மட்டுமல்ல தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். திமுகவுக்கு 23 எம்பிக்கள் இருந்தும் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கவில்லையே. வெற்றி பெற்று ஒரு பயனும் இல்லாமல் போய்விட்டதே என்று உடன்பிறப்புகள் புலம்பித்திரிகின்றனர்.
அகில இந்திய அளவில் ஸ்டாலின் ஒரு முக்கிய தலைவர் என்று தனகுத்தானே சொல்லிக்கொண்டு திரியும்போது, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழாவிற்கு அழைக்காதது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.