கேரளாவில் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி : இசுலாமிய பழமைவாதிகளின் தடைகளை முறியடித்து சென்றார் !

 | 


கேரளாவில் வரும் 23 ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜகவினர் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற முழுமூச்சாக உழைத்து வருகின்றனர். 
இந்த நிலையில் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கும்மணம் ராஜசேகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கேரளா சென்றார்.  
ஏற்கனவே ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பூந்துரா பகுதிகளில் அவர் அங்கு களம் இறங்கி இராணுவம் மற்றும் மத்திய அரசு துணை படைகளுடன் ஏராளமான மீட்பு பணிகளை செய்திருந்தார். 
எனவே தனக்கு நன்கு பரிச்சயம் ஆன அப்பகுதிகளான பூந்துராவிலிருந்து திருவனந்தபுரம் அருகே உள்ள பொழியூர் வரை 40  கிலோமீட்டர் தொலைவுக்கு திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். நிர்மலா சீத்தாராமன் வருகை தெரிந்து கொண்டதும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடினர். பேரணி மாபெரும் பேரணியாக மாறியது. வழியெங்கும் ஏராளமான கூட்டம் கூடியது. 
பூந்துரா பகுதி காங்கிரசின் கோட்டையாகும். அதிக அளவில் இசுலாமிய பழமைவாதிகள் நிறைந்த பகுதியாகும். இவர்கள் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்கள். மேலும் காங்கிரசுடன் இங்கு முஸ்லீம் லீக் கூட்டு வைத்துள்ளது. இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த பழமை வாத இசுலாமியர் கும்பல் ஆயிரக்கணக்கானோர் நிர்மலா சீதாராமன் வந்து கொண்டிருந்த பேரணிக்கு தடை ஏற்படுத்தும் வகையில் வழியில் முற்றுகை இட்டனர். இஸ்லாமியர்கள் நிறைந்த அப்பகுதி வழியாக செல்லக் கூடாது என அச்சுறுத்தினர். 
ஆனால் நிர்மலா சீத்தாராமன் அஞ்சவில்லை. அவருக்கு ஆதரவாக மேலும் தொண்டர்களும், பொது மக்களும் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு உண்டானது. 
இதற்கிடையே ஏராளமான காவல் படையும் குவிக்கப்பட்டதால் பழமை வாதிகள் தலை தெறிக்க ஓடினர். நிர்மலாவின் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் அதே பகுதியில் நடைபெறவிருந்த மற்றொரு காங்கிரஸ் பேரணியில் பங்கேற்க சென்ற திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தரூருக்கு கட்சி தொண்டர்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்காததால் அந்த பேரணி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
எந்த அச்சுறுத்தலுக்கும் பின்வாங்காமல் காரசாரமாக பிரச்சாரம் செய்த நிர்மலா சீத்தாராமனை கேரள மக்கள் வியப்புடன் பார்த்தனர்.  www.opindia.com/2019/04/islamist-fundamentalists-backed-by-congress-block-n-sitharamans-roadshow-in-thiruvananthapuram-kerala-report/