எங்கடா ஆளையே காணோம்!கடுப்பாகிய ஸ்டாலின்!

 | 

திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் வராததால் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
திருச்சியில் திமுக கூட்டணயில் காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.


இவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும் பிரசார கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. காலை 9 மணியளவில் இந்த கூட்டம் துவங்குவதாக இருந்தது. ஆனால் போதிய கூட்டம் வராததால் ஸ்டாலின் தாமதமாக வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கூட்டம் தாமதமாக துவங்கியது.
ஸ்டாலின் பேச துவங்கியதும் கூட்டம் கலையதுவங்கியது. வெயில் ஒரு காரணம் என்றாலும் ஸ்டாலினின் வள, வள, கொழ, கொழ பேச்சு சலிப்பு அடைந்ததாகவும் கலைந்தவர்கள் முணுமுணுத்து கொண்டே சென்றனர்.