கன்னியாஸ்திரியை கற்பழித்த பாதிரியாரை கைது செய்ய கூறி நான்காம் நாளாக போராட்டம் : பாதிரியாருக்கு வரிந்து கட்டும் தேவாலயங்களும், செவி சாய்க்காத பிணராயி ஆளும் கேரள அரசும்

 | 

2014 – 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறை மாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகாலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் காவல்துறையினர் கண்டறிந்த போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருவதாக கோவா குரோனிக்கல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இயேசுவின் சகோதரிகள் கான்வென்ட் விருந்தினர் மாளிகையில் 13 முறை தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த கன்னியாஸ்திரி.பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் கையில் வைத்திருக்கும் போதிலும் அவரை கைது செய்ய கேரள காவல்துறையினர் தயங்கி வருகின்றனர். அரசியல்வாதிகளிடம் இருந்தும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்தும் வரும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.


அதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறைமாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கன்னியாஸ்திரிகள், கேரள மாநிலம் கொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. ஆனால், கற்பழிப்பு குற்றம் புரிந்த பாதிரியார் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் உல்லாசமாக நடமாடி வருகிறார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி வழங்குவதை விட்டுவிட்டு, நீதிக்காக போராடும் கன்னியாஸ்திரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது "மிஷனரிஸ் ஆப் ஜீசஸ்" தேவாலயம். கன்னியாஸ்திரிகளின் போராட்டம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு ஒரு படி மேலே சென்றுவிட்டார் அன்னை ரெஜினா. அன்னை ரெஜினா மற்றும் கன்னியாஸ்திரிகள் அமலா, விர்ஜின் மற்றும் மரியா ஆகியோர் கையெழுத்திட்ட ஒரு செய்தி குறிப்பில், கற்பழித்த பாதிரியாரை அப்பாவி என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து பல தேவாலயங்கள் கற்பழித்த பாதிரியாருக்கு ஆதரவாகவும் போராடும் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராகவும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதன் மூலம், கிறிஸ்துவ தேவாலயத்தில் உள்ளவர்கள் எந்த குற்றம் புரிந்தாலும், அவர்கள் புரிந்த குற்றத்திற்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக கம்யூனிஸ்ட் ஆளும் கேரள மாநிலத்தில் கிறிஸ்துவ பாதிரியார்களின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பிணராயி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.