கலவரத்தை தூண்டிவிட திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சதித்திட்டம்! வன்முறையாளர்களின் கொட்டத்தை அடக்க மோடி அரசு அவசர உத்தரவு!!

 | 

நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது எதிர்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓட்டு எண்ணிக்கையின் போது பெரிய அளவில் கலவரத்தை தூண்டிவிட எதிர்கட்சிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளன.


ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்போதும், முடிவுகள் அறிவிக்கப்படும்போதும் நாடு முழுவதும் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் இந்த கலவரத்தை அரங்கேற்ற எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று சில கருத்துக்கணிப்புகளில் தெரிவித்து இருந்தாலும், மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள ரகசிய தகவல்கள் கருத்துக்கணிப்புகளுக்கு நேர் எதிராக உளளன. அதாவது அதிமுக கூட்டணிக்கே அதிக இடம் கிடைக்கும் என்பதோடு, 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிகமான இடங்களை அதிமுகவே கைப்பற்றும் என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல்.


.இதனால் அதிர்ந்துபோன மு.க.ஸ்டாலின், தனது குண்டர் படையை அழைத்து ரகசிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்காத பட்சத்தில் பெரிய அளவில் கலவரத்தை அரங்கேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாம்.


இதுபோலவே மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், பினராயி விஜயன், கமல்நாத், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, சரத்யாதவ் போன்றவர்களும் சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர்.


இந்த சதித்திட்டங்களை மோப்பம்பிடித்த மத்திய உளவுத்துறை, உடனடியாக இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் ஓட்டு எண்ணும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அவசர உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.


சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும், தேவையான பாதுகாப்பை ஓட்டு எண்ணும் மையங்களில் உறுதி செய்யவும் அனைத்து தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.