இந்தியாவின் அபார வளர்ச்சி உலகின் கவனத்தை கவர்ந்திருப்பதாக பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்-சவூதி பட்டத்து இளவரசர்.!

 | 


இரண்டு நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசீஸை சந்தித்து பேச்சு நடத்தினார்.இந்தியாவின் அபார வளர்ச்சி உலகின் கவனத்தை கவர்ந்திருப்பதாக சவூதி பட்டத்து இளவரசர் பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு, விமான சேவை, புதுப்பிக்கதக்க எரிசக்தி மற்றும் மருத்துவ தயாரிப்புகளை முறைப்படுத்துதல் போன்ற துறைகளில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


இந்தியாவின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள், சுமார் 4 கோடி பேர் பயிற்சி பெறுவார்கள் என்றும் மோடி தெரிவித்தார். இந்த திறன் பயிற்சியினால் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தேர்ந்த ஊழியர்கள் கிடைப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.இந்தியாவின் அபார வளர்ச்சி உலகின் கவனத்தை கவர்ந்திருப்பதாக  பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்-சவூதி பட்டத்து இளவரசர்.!2024ம் ஆண்டுக்குள், சவூதியில் எண்ணெய் சுத்திகரிப்பு, பைப்லைன், எரிவாயு நிலையங்கள், போன்றவற்றை அமைக்க 100 பில்லியன் டாலர் தொகைக்கு முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்தியா தனது இலக்கான 5 டிரில்லியன் டாலர் வளர்ச்சி என்ற இலக்கை 5 ஆண்டுகளில் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.