தொண்டர்களை அவமதித்த பிரியங்கா காந்தி : உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு ராஜினாமா !!

 | 


உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்ட காங்கிரஸ் தலைவர் நீலம் மிஸ்ரா. இவர் தனது மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மக்களவை தொகுதி வேட்பாளர் ராம்காந்த் யாதவுக்காக தேர்தல் பணியாற்றி வருகிறார். 
ராம்காந்த யாதவ் மாவட்ட தலைவரான நீலம் மிஸ்ராவை எதிலும் கலந்தாலோசிப்பதில்லையாம். சென்ற 10 ந்தேதி அங்கு பிரச்சாரத்துக்கு வந்திருந்த பிரியங்கா காந்தியை சந்திக்கவிடவில்லையாம். மேலும் பிரியங்கா காந்தி பங்கேற்ற பேரணி நிகழ்ச்சியிலும் நீலம் மிஸ்ராவை புறக்கணித்தனராம். 
இதனால் வெறுத்துப்போன நீலம் மிஸ்ரா மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் பிரியங்கா காந்தியை சந்தித்து இது குறித்து புகார் செய்ய சென்றார்களாம். ஆனால் பிரியங்கா காந்தி இவர்களை லட்சியம் செய்யவில்லையாம். அவர் எதிரிலேயே ராம்காந்த் யாதவ் அவமானப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. 
மேலும்  பிரியங்கா காந்தியும் இவர்களுடைய குறைகளை கேட்க மறுத்ததுடன், தங்களை  புறக்கணித்தார் என்று கூறி நீலம் மிஸ்ரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர் பணியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்து விட்டனர். 
மேலும் அவர்கள் கட்சி சீனியர்களாகிய தாங்கள் பலமுறை மேலிடத்தால் அவமானப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவர்களுக்கு பாடம் புகட்ட இந்த தொகுதியின் எஸ்பி - பிஎஸ்பி வேட்பாளர் ரங்கநாத் மிஸ்ராவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.     
https://www.opindia.com/2019/05/uttar-pradesh-humiliated-by-priyanka-gandhi-congress-leaders-and-other-office-bearers-quit-the-party/