திடீர் திடீர் என்று வெள்நாடுகளுக்கு ஓடும் ராகுலுக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கங்கை நினைவுக்கு வரும் - ஸ்மிரிதி இரானி காட்டம்!

 | 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போதுஅவர் பேசியதாவது:-


நமது நாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வருகிறார். நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநத்தி செல்கிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினரும், மாயாவதி மற்றும் அகிலேஷ் போன்றவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். இதைத்தவிர அவர்கள் வேறு எதையும்சொல்வதில்லை.


திடீர் திடீர் என்று வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை, 5 ஆண்டுகளுக்குஒருமுறை மட்டுமே நினைவுக்கு வரும்.


அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும்.  அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.  
மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்திக்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரைவணங்கமாட்டார்கள். ஓட்டுதான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாகதான்பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை.மேலும் ராகுல் காந்தி, அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு ஓடிவிட்டார்.
 இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசினார்.