ஸ்மிருதி இராணியை கண்டு பயந்து ஓடும் ராகுல் ? அமேதி வெற்றி உறுதியில்லை என்பதால் வயநாட்டில் போட்டி ?

 | 

கேரள காங்கிரஸின் தலைவர் ராமசந்திரன், ராகுல் காந்தி வயநாடு பாராளுமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறினார். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் காங்கிரஸ் மேலிடம் இதை தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிகிறது.


அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 2014 தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி திக்கி திணறி வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக பா.ஜ.க வின் ஸ்மிருதி இராணி போட்டியிட்டார். அமேதி காங்கிரஸின் கோட்டை என்றாலும், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் ராகுலால் ஜெயிக்க முடிந்தது.


ஸ்மிருதி இராணி ஒரே மாதம் பிரச்சாரம் செய்தாலும் கடுமையான போட்டியை ஏற்படுத்தினார். தோற்ற பொழுதிலும் மாதம் மூன்று நாள் அமேதியில் முகாமிட்டு மக்களுடன் பழகினார். பல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார். தோற்ற வேட்பாளர் தொகுதியின் வளர்ச்சிக்காக வென்ற வேட்பாளரை விட அதிகமாக உழைத்தது இதுவே முதல் முறை.


கலஷ்னிகோவ் துப்பாக்கிகள் உற்பத்தி தொழிற்சாலை, 78000 வீடுகளுக்கு இலவச மின்சாரம், எஃகு தொழிற்சாலை, நவீன பேருந்து நிலையம், சுகாதார நிலையம், ரயில்வே - நெடுஞ்சாலை திட்டங்கள் போன்ற பல திட்டங்களை அமெதிக்கு கொண்டுவந்துள்ளார் ஸ்மிருதி. இதை தொடர்ந்து ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பாக் ராகுல் என்று அமேதி மக்கள் போராடினர்.


ஸ்மிருதி இந்த முறையும் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் இடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அவர் கேரள வயநாடு தொகுதியில் கூடுதலாக போட்டியிடுவார் என்பது ஸ்மிருதி இராணிக்கு பயந்து ஓடுவது போல் உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.