சீசன் டிக்கெட் உயரவில்லை, புறநகர் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை: தொழிலாளர்கள், மாணவர்கள் மோடி அரசுக்கு பாராட்டு!

 | 

மோடி அரசு சென்ற 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்றதிலிருந்து சாதாரண பயணிகள் கட்டணம் நேரடியாக உயர்த்தப்படவில்லை. புறநகர் ரயில் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் ஒரே சீரான அளவில் இருந்து வருகிறது.


இந்த நிலையில் ரயில் பயணிகள் கட்டண வசூல் ரூ.1.18 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.99 ஆயிரத்து 223 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது, ஆனால், செலவின் அடிப்படையில் ரூ.97 ஆயிரத்து 265 மதிப்பிடப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 99 கோடி செலவாகியுள்ளது.


இதை அடுத்து பயணிகள் டிக்கெட் கட்டணம், சரக்குக் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தியுள்ளது.


இதன்படி, புறநகர் ரயில்கள், புறநகர் ரயில்களுக்கான சீசன் டிக்கெட் ஆகியவற்றின் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் புறநகர் அல்லாத பயணிகள் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குளிர்சாதன வசதி அல்லாத 2-ம் வகுப்பு சிட்டிங், 2-ம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது


அதேபோல மெயில் ,எக்ஸ்பிரஸ் குளிர்சாதன வசதி அல்லாத 2-ம் வகுப்பு அமர்வு, 2-ம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.


குளிர்சாதன வகுப்புகளில் ஏ.சி. சேர் கார், ஏ.சி.3 அடுக்கு படுக்கை வசதி, ஏசி 2 படுக்கை வசதி,  ஏசி முதல் வகுப்பு ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய ரயில்களின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.


அதேசமயம், முன்பதிவுக் கட்டணம், சூப்பர் பாஸ்ட் கட்டணம் ஆகியவற்றில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டண விகிதங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.


இந்த நிலையில் புறநகர் ரயில்கள் மூலம் நகர்பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், தினமும் பயணம் செய்யும் தொழிலாளர்கள், மாணவ மாணவியர் மற்றும் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக கட்டண உயர்வு இல்லாத நிலையில் அவர்கள் மோடி அரசுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.