பரம எதிரி காங்கிரஸுடன் போய் சேருவதா? பதவியை தூக்கி எறிஞ்ச 'மானமுள்ள' சிவ சேனா தலைவர்!

 | 

12 வயதில் பால் தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு சிவ சேனா கட்சிக்கு உழைக்க ஆரம்பித்த ரமேஷ் சோலன்கி, 21 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.


கடவுள் ஶ்ரீராமரை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியுடன் எப்படி கூட்டணி அமைக்க என் மனது சம்மதிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரமேஷ்.
https://twitter.com/Rajput_Ramesh/status/1199334911204741125?s=20


அதேசமயம், கட்சி ஆட்சி அமைக்கும் இந்த தருணத்தில் தான் கட்சியில் இருந்து விலகுவதாகவும், கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி அமையாத காரணத்தால் விலகவில்லை என்றும் உணர்ச்சிகனமான பதிவை இட்டுள்ளார்.
https://twitter.com/Rajput_Ramesh/status/1199334963952271362?s=20


மானமுள்ள சிவ சேனை தொண்டர்கள் இனியும் அக்கட்சியில் நீடிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.