ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் – சித்து-வின் கருத்தால் மேலும் சர்ச்சை

 | 

பாகிஸ்தானின் பகுதியில் கர்தார்பூர் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அங்கு காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் சித்துவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. அடிக்கல் நாட்டு விழாவில் இம்ரான் கான், சித்துவை புகழ்ந்தது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் இந்த புதிய சர்ச்சையும் வெளியாகியது.
பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் எனவும் பா.ஜ.க அறிவுறுத்தியது. இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம் வெளியான சர்ச்சைக்கு சித்து பதிலளித்தார். “பாகிஸ்தானில் அதிகமான அன்பு காட்டப்பட்டது. ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான போட்டோக்கள் எடுக்கப்பட்டது. அப்படி புகைப்படம் எடுத்தவர்களில் சாவ்லா அல்லது சீமாயென யாரும் எனக்கு தெரியாது,” என்றார்.இதுதொடர்பான விமர்சங்கள் தொடர்ந்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை அனுப்பினார் என்று சித்து கூறியுள்ளது மேலும் சர்ச்சை அதிகரிக்க செய்துள்ளது.  ஏற்கனவே சித்து புகைப்பட விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், “ராகுல் காந்திதான் என்னுடைய கேப்டன். என்னை அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்,” என்று சித்து கூறியுள்ளார். அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பாராட்டியுள்ளனர் எனவும் கூறியுள்ளார் சித்து.