மத்தியிலும் சூப்பர் ! மாநிலத்திலும் சூப்பர்!! பாஜக, அதிமுக ஆட்சி குறித்து ஜி.கே.வாசன் புகழாரம்!!

 | 

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:


இந்த இடைத்தேர்தல் என்பது தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். ஆளும் அதிமுக, ஜெயலலிதாவின் திட்டங்களை கிராமம் முதல் நகரம் வரையில் சிறப்பாக கொண்டு சேர்த்து வருகிறது. 
இந்தியாவில் சிறந்த மாநில அரசாக தமிழக அரசு முதல் வரிசையில் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு மக்களாக எளிமையாக பழகி, பணியாற்றி வருகின்றனர். அவர்கள் செயல்பாடுகள் தொடர வேண்டும். பாஜக இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் கட்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.