தமிமுன் அன்சாரியின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுகிறது – சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிச்சாமி!

 | 

கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்,அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில், நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இவர் இன்று வரை அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.


ஆனால் இவர் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்துகொண்டு, அதிமுகவின் கொள்கைகளுக்கும், முடிவுகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இது அதிமுக தலைமைக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், தமிமும் அன்சாரி இதுபோன்று அதிமுகவுக்கு எதிராக செயல்படுவாரா? என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் முதல், மூத்த தலைவர்கள் வரை எழுந்துள்ளது.


மோடி அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்பிக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர். இது அதிமுக கட்சி தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் எம்பிக்கள் வாக்களித்து உள்ளனர்.தமிமுன் அன்சாரியின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுகிறது – சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிச்சாமி!


இந்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை முஸ்லிம் மத வெறியர்களால் பாதிக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டு, அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், போன்றோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு சிறு துளி அளவு பாதிப்பு இல்லை என்பது அப்பட்டமான வெளிப்படையான உண்மை.


அப்படி இருந்தும் திமுகவுக்கு சாதகமாக தொடர்ந்து நிலைபாட்டை எடுத்து வரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்.


இவர் சமீபத்தில் சென்னையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக அரசை மிரட்டி பேசினார். “சட்டசபையை முற்றுகையிடுவோம்” என்று ஆவேசமாக அறிவித்தார்.


இதுதொடர்பாக  தமிமுன் அன்சாரி பேசியதாவது:-


மத்திய அரசு கொண்டுவந்துள்ள எந்த சட்டங்களையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆவணங்கள் வந்தால், அந்த அதிகாரிகளை வீதியில் நடக்க விடமாட்டோம். அவர்களை துரத்தி அடிப்போம்.


தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு நாங்கள் போராட்டம் நடத்துவோம்.


இவ்வாறு ஆவேசமாக தமிமுன் அன்சாரி பேசினார்.


இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (06.01.2020) கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, திமுக எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அதிமுக அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதோடு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டார். அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, "அதிமுக, எந்த நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று திமிராக அறிவித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த அதிமுக மூத்த தலைவர்களும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும், “இதன் பிறகும் எதற்காக தமிமுன் அன்சாரி எம்எல்ஏவாக தொடரச் செய்ய வேண்டும். அவரது எம்எல்ஏ பதவியை உடனடியாக பறிக்க வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளனர்.


அவர்களும் தமிமுன் அன்சாரியின் எம்எல்ஏ பதவியை பறிக்கும் முடிவில் இருபதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கருதுகிறது. அதோடு ஜெயலலிதா தலைமையில் அதிமுக எப்படி கட்டுப்பாடான இயக்கமாக இருந்ததோ அதே போன்று இப்போதும் அதிமுகவை கட்டுப்பாடான இயக்கமாக வழிநடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் முடிவு செய்துள்ளனர்.


எனவே தமிமுன் அன்சாரியின் எம்எல்ஏ பதவி விரைவில் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.