தேர்தல் செலவுகளுக்காக திமுகவுக்கு கரன்சி கரம் நீட்டினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின் ?? 70 இடங்களில் வருமானத் துறையினர் கிடுக்கிப்பிடி சோதனை !

 | 


கோயம்புத்தூர், காந்திநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார். இதனால் ‘லாட்டரி ராஜா’ (லாட்டரி கிங்), லாட்டரி மார்ட்டின் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.


மார்ட்டின் முக்கிய தொழிலாக லாட்டரி விற்பனை செய்து வருகிறார். மேற்கு வங்காளம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில், மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் செய்து, முகவர்களை நியமித்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இது தவிர பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.


இந்தநிலையில் கோயம்புத்தூர், சென்னை மற்றும் கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் அவருக்கு சொந்தமான சுமார் 70 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது மகன் சார்லஸ் மார்ட்டின் நடத்தும் தொலைக்காட்சி சேனல் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடந்தது.


வருமானவரி சோதனையில் அவரது தொழில் சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆவணங்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது ஆய்வுக்கு பிறகே தெரியவரும். பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இப்போது தெரிவிக்க இயலாது என்று சோதனை நடத்திவரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இந்த நிலையில் மார்ட்டின் திமுகவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும், கோடானு கோடி கொடுக்கல், வாங்கல்கள் இருதரப்புக்கும் உண்டு என்றும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பணம் தண்ணீராக செலவழிக்கப்பட இவர் உதவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், வேலூரில் துரைமுருகன் இடங்களில் பிடிபட்ட பணத்தைக் கொண்டு விசாரணை நடத்தியதில் கிடைத்த புலன்களைக் கொண்டு இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.  


இந்நிலையில் இன்று நடைபெறும் மெகா ரெய்டுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக சொல்லப்படுவது அவர் திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுத்ததுதான் என்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் மார்ட்டினின் பிசினஸ் அதிகமாக இருப்பதால் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரசுக்கு தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார் என்று டிஜிட்டல் பத்திரிகைகளில் இன்று வெளியான செய்திகள் குறிப்பிடுகின்றன.


தேர்தல் சமயத்தில் கடைசி நேரத்தில் மார்ட்டின் திமுகவுக்கு 40 கோடி தேர்தல் நிதி கொடுத்தார் என்றும், இந்த தொகை ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாக வழங்கப்பட்டிருக்கலாம் என்றும்,  ஒரு தகவல் மத்திய உளவுத்துறைக்குச் சென்றிருக்கிறது. இந்த அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வரலாம் என்றும் அப்பத்திரிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன. மார்டின் ஏற்கனவே பல்வேறு பணம் கடத்தல் ( ஹவாலா ) வழக்குகளில் தொடர்புள்ளவர் என்றும் கூறப்படுகிறது. https://minnambalam.comwww.dailythanthi.com/News/TopNews/2019/05/01025439/Lottery-chancellor-Owned-by-Martin-70-places-I