அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் பா.ஜ.க ஐ.டி விங் அடுத்த மூவ்.!

 | 

மிழகத்தில் கடந்த ஒரு மாதமாக திருவள்ளுவர் பற்றி தான் பேச்சு இதற்கு காரணம் தமிழக பா.ஜ.க வின் ட்வீட் இந்த நிலையில்.தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் இல்லங்கள், திருவள்ளுவர் படங்களை வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருக்குறள் கைபுத்தகம் இலவசமாக வழங்கினர்.


இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டேக் செய்து ஒரு ட்விட் செய்தார் பாஜக ஐ.டி விங் மாநில அமைப்பாளர் நிர்மல்குமார். அத்திரு பதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து பதில் வந்தது அதில் முதல்வரின் அனுமதி பெற்று திருக்குறள் அச்சிடப்படும் என தெரிவித்தார்.
https://twitter.com/RajBhalajioffl/status/1194301535322173441


அடுத்ததாக பாஜக ஐ.டி விங் அமைப்பாளர் அவர்களின் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது


பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு ஒரு வேண்டுகோள் "


தமிழை விருப்பபாடமாக எடுக்காத மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு நேரில் சென்று பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் வாரம்தோறும் ஒரு பாடவேளையாவது(Period) திருக்குறளை பயிற்றுவிக்க வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு நிர்மல் குமார் ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1195529083221729281
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1195266260268810241