2019 ஆம் ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை இதுதானாம்!! அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார் !

 | 


சென்னை விமான நிலையத்தில நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. கற்பனையில் யார்வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம். திமுகவின் பி-டீமாக டிடிவி.தினகரன் செயல்படுகிறார்.  விளையாட்டு துறைக்கு அதிமுக அரசு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.