இதுதான் குஜராத்தை சேர்ந்த ஒரு டீ வியாபாரியின் சக்தி !! மோடியின் பேச்சுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கை தட்டல் !

 | 


குஜராத்தின் அம்ரேலி தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-


இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் படேலின் சிலையை இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவர் கூட இதுவரை படேல் சிலையை பார்க்க வரவில்லை. படேலை தங்கள் கட்சியை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடிவரும் காங்கிரசார் அவரது சிலையை பார்க்க வராதது ஏன்?


70 ஆண்டுகள் கடந்த பிறகும் காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாமல் இருந்து வந்தது. அரசியல் ஆதாயத்துக்காக காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது காங்கிரசின் கொள்கை ஆகும். காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரவி இருந்த பயங்கரவாதத்தை 2½ மாவட்டங்களுக்குள்ளாக நாங்கள் சுருக்கி விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த பகுதிகளிலும் குண்டுவெடிப்பு நிகழவில்லை.


நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் முறையாக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குறைவான தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. அதைப்போல முதல் முறையாக இந்த தேர்தலில்தான் அந்த கட்சி குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. இதுதான் குஜராத்தை சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் சக்தி ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியதும் ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி இரசித்தனர்.