மனித பிழையாலே உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது.. மன்னிச்சிடுங்க..! உலக நாடுகள் மத்தியில் சரணடைந்த ஈரான்.!

 | 

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.


இதில் அமெரிக்காவும், கனடாவும் ஈரான் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்து வந்த நிலையில், அது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.


முதலில் தொழில்நுட்ப கோளாறால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. பின்னர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதனை தர மாட்டோம் என்று ஈரான் கூறியது. இதனை தொடர்ந்தே சந்தகம் மேலும் வலுக்க ஆரம்பித்தது.


இந்த நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், “ பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.