#UrbanNaxals இந்திய அரசில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் சீன ஏஜென்டுகள்!

 | 





பொதுவாக பலநாடுகள் தங்களது நாட்டின் பலத்தை அதிகரிக்க எதிரி நாட்டிலேயே பல உளவாளிகளை வைத்து குழப்பங்களை செய்வதும், குண்டு வெடிப்புகளை அரங்கேற்றுவதும் அதற்க்காக சில அரசியல்வாதிகளை, சமூக நிறுவனங்களின் பெயரில் இயங்கும் சமூக ஆர்வலர்களை, மனித உரிமை ஆர்வலர்களை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்திக் கொள்வதும் எதிரி நாட்டின் ராஜதந்திரங்களில் ஒன்று.


அதற்காக அரசு சாராத சில அமைப்புகளை தனது நாட்டிலேயே உருவாக்கி அந்த அமைப்புகளின் மூலம் எதிரி நாட்டு அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்ககள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் மீது தனது மறைமுக ஆதிக்கத்தை நிலை நாட்ட பயன்படுத்திக் கொள்ளும். அவர்களுக்கு சமூக சேவைக்கான பட்டங்களை வழங்குவதும், நிதி வழங்குவதும் அரசு சாராத அமைப்புகளின் பணியாகும். தற்போது கூட நமது நாட்டின் அரசியல், சமூக பிரமுகர்கட்கு வெளிநாட்டில் வெளிநாட்டு அமைப்புகளின் பெயரில் டாக்டர் பட்டம் கொடுப்பதும், தமிழ் சேவைக்காக பணமுடிப்பு வழங்குவதும், மனித உரிமைக்காக போராடுவதற்காக பட்டம், நிதி வழங்குவதையும் நாம் கூர்ந்து கவனித்தால் தெரியவரும்.


அதன் காரணமாகவே அவர்கள் அந்த நன்கொடையைக் கொண்டு ஊடகங்கள் வாயிலாக தாங்கள் பெயரும் புகழும் பெற பணத்தை தண்ணீராக செலவு செய்வதையும் தாங்கள் பெற்ற, பெறப்போகும் நன்கொடைகள், பட்டங்கள் ஆகியவற்றிற்கு விசுவாசமாக இருக்க தெரிந்தோ தெரியாமலோ அந்த நாட்டிற்கு விலை போவதையும் காணலாம். இவர்கள் அவ்வப்போது அந்த நாட்டிற்க்கு ஆதரவாக இங்கே செயல்படுபவர்களுக்கு உரிமைக்குரல் கொடுப்பவர்களாகும்.


இந்த நாட்டின் அதிருப்தியாளர்களை ஊக்குவிக்கவும், பல சமயங்களில் நிதி உதவிகளை வழங்கி நேரடியாக உள்நாட்டில் போராட்டத்தை தூண்டுவதும் எதிரி நாட்டினர் செய்யக்கூடிய ஒன்றாகும். அந்த நாடுகளின் உளவுத்துறை இதில் பெரும் பங்காற்றும் என்பது ராஜதந்திரிகள் அறிந்த ஒன்று. அவர்களுக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுப்பது இந்த உளவாளிகளின் பணியாகும்.


முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது அரசிற்கு காஷ்மீர் அமெரிக்க சபை ( KAC ) அமைப்பு குறித்து தெரிந்திருந்தும், அதில் தொடர்புள்ளவர்கள் குறித்து அறிந்திருந்தும், அவர்களது பின்ணனி குறித்து உளவு அமைப்பினர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசுக்குத் தெரிவித்திருந்தும், எப்படி இவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டார்கள்? எப்படி இந்த பதவிகளில் அமர்த்தப்பட்டனர்? யாருடைய தூண்டுதலில் இந்த நியமனங்கள் போடப்பட்டன? இந்திய அரசுக்குள் ஊடுருவியுள்ள ஐ.எஸ்.ஐ ஏஜென்டுகள் யார்? எத்தனை ஏஜெண்டுகள் இந்த நாட்டில் ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளாகவும், சீன ஏஜெண்டுகளாகவும்  உள்ளனர்? என்ற விவரம் கசியவிடப்படவில்லை.


அதனால் தான் சீனா கைப் பாவைகளான மாவோயிஸ்ட்களின் சிந்தனை வாதி டாக்டர் பினாய்சென்-னை அப்போது  திட்டக்குழுவில் சேர்த்திருக்கிறார்கள்.  அரசு தேர்ந்தெடுத்த ஒரு நபர் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளிடம் விலை போயிருகிறார் என்பது வெட்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் காங்கிரஸ் அரசின் அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நடத்திய மாநாட்டை பத்திரிக்கையாளர்கள் தான் கலந்து கொண்டார் என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளதை, காங்கிரசும், சோனியாவும் ஏற்றுக் கொள்வார்களே தவிர, தேச பக்தர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை  காங்கிரஸ் அரசு, இடதுசாரிகளும்  புரிந்து கொள்ளும் காலம் வரும்.