Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு போராளியை பெங்களூர் வேட்பாளராக்கிய காங்கிரஸ் கட்சி

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு போராளியை பெங்களூர் வேட்பாளராக்கிய காங்கிரஸ் கட்சி

By :

  |  15 April 2018 5:11 PM GMT

தமிழர் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தது முதல் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்து வருவது தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க முழு காரணமுமே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாட்டை சேர்த்தது தான் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கான காரணம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், காளை மாடுகளை 2011 ஜூலை 11-ம் தேதி, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தார். அதாவது சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு ஆகிய வனவிலங்குகள் இடம்பெற்ற அந்த பட்டியலில், காளைகளையும் சேர்த்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் மத்தியில் கூட்டணியில் இருந்த தி.மு.க வாய் திறக்காமல் மெளனம் காத்து தமிழர் உரிமைகளை காவு கொடுத்தது வரலாறு.
இந்த மாபெரும் தமிழின துரோகத்தை உண்மை என்றும் காங்கிரஸ், தி.மு.க-வினால் தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது என்பதை வெட்டவெளிச்சமாக போட்டுடைத்தார் ஜெய்ராம் ரமேஷ்-க்கு பிறகு மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தில் வனத்துறை அமைச்சராக செயல்பட்ட ஜெயந்தி நடராஜன். காணொளியை காண்க.
https://youtu.be/WmMjX12e-Uc
ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் குறியாக இருந்தது பிறகு தெரிய வந்தது. இது தொடர்பாக மன்மோகன் சிங் எழுதிய கடிதம் வெளிவந்ததும் தமிழர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.  அக்கடிதம்:

2016 தமிழக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு தடை விதிப்போம் என உறுதி அளித்து இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் இத்தேர்தலில் கூட்டணியில் இருந்த தி.மு.க இதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட கேட்காமல் தமிழ் இனத்திற்கு மீண்டும் ஒரு துரோகத்தை இழைத்தது.
https://youtu.be/n-l-EA44rF8
தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழர் விரோத காங்கிரஸ் கட்சி தற்போது ஜல்லிக்கட்டை எதிர்த்து போராடி வரும் செளம்யா ரெட்டி என்பவரை அடுத்த மாதம்(May 2018) நடைபெற இருக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெங்களூரில் உள்ள ஜெயநகர் தொகுதிக்கு வேட்பாளராக நியமித்து அழகு பார்த்துள்ளது. செளம்யா ரெட்டி விலங்குகள் நல வாரியத்துறையின் உறுப்பினராக இருப்பவர்; தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் என்பது கூடுதல் தகவல்.
https://youtu.be/vjtMsPLcytY
இவ்வாறு தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு எதிராக போராடிய அனைவரையும் ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இது இந்திய பாரம்பரியத்தை வேரோடு அழிக்கும் நோக்குடன் செயல்படும் வெளிநாடு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை திருப்தி படுத்துவதற்காக செய்கின்றனரா என்ற கேள்வி எழாமல் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் தி.மு.க இந்த தமிழர் விரோத போக்கை ஒரு நாளும் கண்டித்தது இல்லை. தற்போது ஜல்லிக்கட்டை என்னாளும் இனி நடத்தவே முடியாது என சூளுரைத்த செளம்யா ரெட்டியை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர் உரிமையை காக்குமா அல்லது எப்போதும் போல் கை கட்டி வாய் மூடி காங்கிரஸ் கட்சியின் அடிமையாக இருக்குமா தி.மு.க என்பதே ஒவ்வொரு தமிழர் மனதிலும் எழும் கேள்வி.
Next Story