Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய பாதுகாப்பு கண்காட்சியின் வெற்றி பிரிவினைவாதிகளுக்கு சவுக்கடி

இந்திய பாதுகாப்பு கண்காட்சியின் வெற்றி பிரிவினைவாதிகளுக்கு சவுக்கடி

By :

  |  15 April 2018 3:48 PM GMT

இந்திய பாதுகாப்பு கண்காட்சி 2018(#DefExpo2018)  பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் சென்னையை அடுத்த திருவிடந்தையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. லட்சகணக்கான மக்கள் (3 லட்சத்திற்கும் மேல்) கண்காட்சியை காண ஆர்வமுடன் ECR சாலையில் குவிந்தனர். சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. வாகன நெரிசலால் கடற்கரை சாலை ஸ்தம்பித்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

கண்காட்சியின் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்தில் சகயாதிரி (Sahyadri), ககேத்ரா (Kakedra), சுமித்திரா (Sumitra) உள்ளிட்ட இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4 போர்க் கப்பல்கள் மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. 35,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இக்கப்பல்களை கண்டுகளித்துள்ளனர். தீவுத்திடலில் இருந்து கடற்படைக்கு சொந்தமான வாகனங்களில் மக்கள் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கப்பல்களை காண அனுமதிக்கப்பட்டனர்.

677 காட்சியாளர்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்களுடைய உற்பத்தி திறனை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் 523 காட்சியாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 154 காட்சியாளர்கள் 40-ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இந்தியாவை சேர்ந்த பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை நேரடி சாகசங்களை செய்து காட்டின. தேஜஸ் லைட் போர் விமானம், லைட் யூடலிட்டி ஹெலிகாப்டர் மற்றும் அர்ஜூன் டாங்கிகள் ஆகியவை அடங்கும்.

75 ரஷ்ய நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். 7 பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாட்டு நிறுவனங்களுக்கிடையே போடப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களும் பெருவாரியாக பங்கேற்றனர். முன்னதாக, இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டை பிரதானமான ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையமாக உருவாக்குவதே நோக்கம் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருந்தார். இதன் அடுத்த கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ராணுவ தளவாட உற்பத்தி மையம் (Integrated Defence Corridor) அமைக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி தமிழக உற்பத்தியாளர்கள் வெகுவாக பயனடைவர்.

சிலர் தனி தமிழ்நாடு வேண்டும் என்று முழக்கமிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், பாதுகாப்பு துறை கண்காட்சியின் மிகப் பெரிய வெற்றி, பிரிவினைவாதிகளுக்கான மிக பெரிய சவுக்கடி என்பதில் மாற்று கருத்து இல்லவே இல்லை.
Next Story