Top
undefined
Begin typing your search above and press return to search.

 53 ஆண்டுகளில் ஒரு தலித் தலைவரை கூட உருவாக்காத தலித் விரோத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

 53 ஆண்டுகளில் ஒரு தலித் தலைவரை கூட உருவாக்காத தலித் விரோத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

By :

  |  23 April 2018 1:27 PM GMT

17 உறுப்பினர்களை உள்ளடக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ தான் அக்கட்சியின் உயர்மட்ட குழு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட 53 ஆண்டுகளில் அதன் பொலிட் பீரோவில் ஒரு தலித் கூட இதுவரை உறுப்பினராக இடம் பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சி தகவல். தலித்துகளுக்காக பாடுபடும் கட்சி என தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி அவர்களுக்கான பிரதிநிதிதுவத்தை அளிக்காமல் இருப்பதால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று ஹைதராபாத்தில் நடந்த அக்கட்சியின் 22-ஆம் மாநாட்டு முடிவில் பொலிட் பீரோவின் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இக்கட்சியின் உயர்மட்ட குழுவில் இந்த முறையும் ஒரு தலித் கூட இடம்பெறவில்லை. இந்த ஒடுக்குமுறை, கட்சி துவங்கப்பட்ட கடந்த 53 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் போராட்டங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சி, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கும் ஒரு கட்சி என்று தன்னை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கட்சியின் உயர்மட்ட பொலிட் பீரோவில் அதிகமாக ஆண்களும், உயர் ஜாதியினரும் இடம்பிடித்திருப்பது அக்கட்சியை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் பதவியான பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரை இருந்த & இருக்கும் 5 பேருமே உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் தான்(அதில் மூவர் பிராமணர்கள்). இந்த ஐவரும் ஆண்களே; பெண்களுக்கு எப்போதும் இடமில்லை. ஒரு பெண்ணுக்கு  மார்க்சிஸ்ட் பொலிட் பீரோவில் முதன் முதலில் 2005-ஆம் ஆண்டு தான் உறுப்பினர் ஆவதற்கு வாய்ப்பே கிடைத்தது; பிருந்தா கரத், 2005 ஆம் ஆண்டில் தான் பொலிட் பீரோ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தனது சொந்த கட்சி பொலிட் பீரோவில் பன்முகத்தன்மைக்கு இடமளிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் ஜனாதிபதியாக ஒரு தலித்தை நியமித்த பா.ஜ.க-வை தலித் விரோத கட்சி எனக் கூறி கூச்சல் போடுவது வேடிக்கையிலும் வேடிக்கை. மக்கள் முட்டாள்கள் இல்லை. அதனால் தான் ஒரு காலத்தில் கோலோச்சிய வங்கம் மற்றும் திரிப்புராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மக்களால் அழிக்கப்பட்டுள்ளது. மொத்த இந்தியாவில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் காணாமல் போகும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
Next Story