Top
undefined
Begin typing your search above and press return to search.

குமரியில் கிறிஸ்தவ மதவாத கும்பலின் கொலை வெறியாட்டம்!

குமரியில் கிறிஸ்தவ மதவாத கும்பலின் கொலை வெறியாட்டம்!

By :

  |  29 April 2018 2:32 PM GMT

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியைச் சேர்ந்த பகோடு பேரூராட்சி இந்து முன்னணி தலைவராக பதவி வகிப்பவர் சாஜாராம். இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் இந்துக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் போராடி வருபவர்.  இவர், தான் நடத்தும் கடையை பூட்டிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, அதே பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கிறிஸ்தவ கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டினர்.
அவர்களிடமிருந்து தப்பிய சாஜாராம் தனது வீட்டிற்குள் புகுந்தார். அப்பொழுதும் விடாமல் அவரை பின் தொடர்ந்து வந்த அந்த கிறிஸ்தவ மதவெறி கும்பல் சாஜாராமை மீண்டும் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் சாஜாராம். அவரை மீட்ட ஊர் மக்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மார்த்தாண்டம் போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்துக்களின் உரிமைக்காக போராடுபவர்களை,  மாற்று மதத்தை சேர்ந்த மதவாதிகள் தாக்குவது அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களை கொலை செய்ய முயற்சி செய்து மக்களிடையே உள்ள மத நல்லிணக்கத்தை கெடுப்பவர்களை தமிழக ஊடங்கங்களும் அரசியல் வாதிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
Picture Courtesy - Polimer News.
Next Story