Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி ஆட்சியில் ஒடுக்கப்பட்டுள்ள இடது சாரி தீவிரவாதம் - கள நிலவரம்!

மோடி ஆட்சியில் ஒடுக்கப்பட்டுள்ள இடது சாரி தீவிரவாதம் - கள நிலவரம்!

By :

  |  30 April 2018 8:18 PM GMT

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இடது சாரி தீவிரவாதத்தை தடுக்கவும், அதை எதிர்த்து போராடவும் மத்திய உள்துறை அமைச்சகம் “தேசிய செயல் திட்டத்தை” நடைமுறைப்படுத்தி வருகிறது.  இது பன்முனை  யுத்திகளை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ரீதியாக எடுக்க உதவுகிறது.
இப்புதிய கொள்கையின் முக்கிய அம்சமே வன்முறைக்கு எதிரான பூரண எதிர்ப்பை தெரிவிப்பதும் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான பெரிய உந்துதலை ஏற்படுத்துவதும் தான். இவ்வளர்ச்சியின் மூலம் ஏழை மக்களும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்க கூடிய பாதிக்கப்பட்ட மக்களும் பெரிதும் பயனடைவார்கள்.
மொத்தம் 10 மாநிலங்களில் 106 மாவட்டங்களை இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடமாக வகைப்படுத்தியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் “பாதுகாப்பு தொடர்பான செலவீனங்கள் திட்டத்தின்”( Security Related Expenditure Scheme (SRE)) கீழ் இம்மாவட்டங்கள் வருகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட மாநிலங்களில் ஏற்படும், பாதுகாப்பு தொடர்பான செலவுகளான “போக்குவரத்து, தகவல் தொடர்பு, வாகனங்களை வாடகைக்கு எடுத்தல், சரணடைந்த மாவேயிஸ்ட்டுகளுக்கு உதவி, தற்காலிக உள்கட்டமைப்பு” போன்றவைகளை ஈடு செய்வதற்கான நிதி வழங்கப்படுகிறது.
மொத்தமுள்ள 106 மாவட்டங்களில் 35 மாவட்டங்கள், நாடு முழுவதும் நிகழும் இடது சாரி தீவிரவாதத்தில் 80 முதல் 90 சதவீத வன்முறை நிகழும் மாவட்டங்களாக கணிக்கப்பட்டு “அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி வகைப்படுத்துவதன் மூலம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த அடிப்படை வளங்களை எப்படி பயன்படுத்துவது என்ற கவனம் அம்மாவட்டங்களுக்கு கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளில், பல மாவட்டங்கள் சிறிய மாவட்டங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் SRE திட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த 106 மாவட்டங்கள் பூவியியல் ரீதியாக விரிந்து 126 மாவட்டமாக உயர்ந்துள்ளது. மேலும் “அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களாக” அறிவிக்கப்பட்டிருந்த 35 மாவட்டங்கள், 36 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இடது சாரி தீவிரவாத சூழ்நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2013 -ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வன்முறை சம்பவங்கள் 20 சதவீதமாக சரிந்துள்ளது. அத்துடன் இது தொடர்பான இறப்பு விகிதம் 34 சதவீதமாக குறைந்துள்ளது.
புவியியல் ரீதியாக பரவியிருந்த இடது சாரி தீவிரவாதம் 2013 ஆம் ஆண்டில் 76 மாவட்டமாக இருந்தது தற்போது 2017 ஆம் ஆண்டில் 58 மாவட்டமாக குறைந்துள்ளது. இது தவிர குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் வெறும் 30 மாவட்டங்களில் மட்டுமே நாட்டின் 90 சதவீத “இடது சாரி தீவிரவாத வன்முறை” நடந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில புதிய மாவட்டங்களில் இடது சாரி தீவிரவாதம் ஊடுருவி விரிவடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட கள நிலவரத்திற்க்கு ஏற்ப வளங்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மீளாய்வு செய்யவும்  அந்தந்த மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரிவான பயிற்சி ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது. அதன் படி 44 மாவட்டங்கள் விலக்கப்பட்டு, SRE திட்ட பட்டியலில் புதிதாக 8 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய மூன்று மாநிலங்களின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடி பகுதிகளில் தங்கள் செல்வாக்கை விரிவுப்படுத்த மாவோயிஸ்டுகள் எடுத்து வரும் முயற்சிகளை எதிர்க்கும் விதமாக, கேரளாவின் மூன்று மாவட்டங்கள் SRE திட்ட பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவித வன்முறையும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை என்ற போதிலும், இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நடைமுறையின் விளைவாக, 126 என்ற எண்ணிக்கை குறைந்து, 11 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. “அதிக பாதிப்புக்குள்ளான” மாவட்டமாக இருந்த 36 மாவட்டங்கள் சீர் செய்யப்பட்டு 30 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
திருத்தியமைக்கப்பட்ட இந்த வகைப்படுத்துதல் இடது சாரி தீவிரவாதத்தின் உண்மை நிலையை நிதர்சனமாக காட்சிப்படுத்துகிறது.
Next Story