Top
undefined
Begin typing your search above and press return to search.

சாமான்ய தமிழர்களுடன் நெருக்கமாகும் நிர்மலா சீத்தாராமன் - தமிழக பயணத்தின் சிறப்புகள்

சாமான்ய தமிழர்களுடன் நெருக்கமாகும் நிர்மலா சீத்தாராமன் - தமிழக பயணத்தின் சிறப்புகள்

By :

  |  4 May 2018 1:53 AM GMT

கடந்த மே 2 மற்றும் 3 ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன். பயணத்தின் போது, சாமான்ய தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அடிமட்ட தொண்டர்களின் வீட்டில் தேநீர், உணவு என்று மிகவும் எளிமையாக நடந்துகொண்டு திராவிட அரசியல்வாதிகளை கதி கலங்க வைத்துள்ளார்.
மே 2, ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளுகுடி பஞ்சாயத்துக்கு விஜயம் செய்து அங்கன்வாடி தொழிலாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
https://twitter.com/DefenceMinIndia/status/991662149087854592
உஜலா திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், கள்ளிகுடி பஞ்சாயத்தில் LED-பல்புகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். LED-பல்புகளை பயன்படுத்துவதால் எரிசக்தி திறன் மேம்படும் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மின்சார கட்டணம் குறையும்.
ராமநாதபுரம் மாவட்டம் காலையூரில் 75% - க்கு மேல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள். காலையூரில், பிரதான மந்திரி உஜ்ஜவாலா யோஜனாவின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர்  இணைப்புகளை வழங்கினார். பிரதான மந்திரி உஜ்ஜவாலா யோஜனா என்பது கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வந்த ஏழு முக்கியமான திட்டகங்களில் ஒன்று. ஒரு மாவட்டத்தின் மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் திட்டமாகவும் கருதப்படுகிறது.
https://twitter.com/DefenceMinIndia/status/991702275012771840
மேலும், அனைத்து  மக்களுக்கும் வங்கி கணக்கு கிடைக்கும் திட்டமான ஜன் தன் யோஜனா, இரண்டு வகையான பயிர் காப்பிட்டு திட்டங்கள், இந்திரா தனுஷ் எனப்படும் சுகாதார திட்டம் என அனைத்தும் இப்பகுதி மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காலையூரில் பஞ்சாயத்து தலைவர் சிவகுமாரின் வீட்டில் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தேநீர் அருந்தினார்.
https://twitter.com/nsitharaman/status/991750251462656000
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை மாற்றுவதற்கான பல முக்கிய திட்டங்களை கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்தார் மத்திய அமைச்சர். அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த திட்டங்களை மேற்பார்வை செய்தார். ஜனவரி 18-ம் தேதி மாவட்ட தலைமையகத்தில் முதல் கூட்டத்தைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மற்றும் பரமகுடியில் அமல்படுத்தபடும் திட்டங்களை மறு ஆய்வு செய்தார்.
நிதி ஆயோக் திட்டத்தின் விருப்பமான மாவட்டங்களின் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது, விருதுநகர் மாவட்டம். இதற்க்கு முன்பாக 17-வது இடத்தில் இருந்தது. இது அந்த மாவட்ட மக்களின் விரைவான வளர்ச்சியை காட்டுகிறது.
https://twitter.com/DefenceMinIndia/status/991972917771554817
அதன் பிறகு, பரமக்குடியில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கு பெற்று உரையாற்றினார்.
https://twitter.com/nsitharamanoffc/status/991927956971798528
இறுதியாக, பா.ஜ.க மாநில செயலாளர், திரு. பால கணபதி அவர்களின் இல்லத்தில் இரவு உணவு அருந்தினார்.
https://twitter.com/nsitharaman/status/991752875146731520
மே 3 ஆம் தேதி, மதுரையை அடுத்த திருமங்கலத்தில், பா.ஜ.க நிர்வாகிகளின் பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாடினார். பிறகு, கோட்டநத்தம் ஊராட்சி பா.ஜ.க SC அணியை சேர்ந்த நிர்வாகி திரு. முருகன் அவர்களின் இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.
https://twitter.com/nsitharaman/status/991992155739697153
மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க-வினருடன் திருமங்கலத்தில் கலந்துரையாடினார் பாதுகாப்பு துறை அமைச்சர்.
https://twitter.com/nsitharamanoffc/status/992025241902706688
தி.மு.க மற்றும் எதிர் கட்சியினர் நிர்மலா சீத்தாராமன் வருகையை அடுத்து கருப்பு கொடி காட்டியும், தாக்கியும் இருந்த நிலையில், இவர் மக்களுடன் நெருக்கமாகி வருவதை தமிழக அரசியல் களம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது.
Next Story